போலித் தங்க ஆபரணங்கள் தயாரிக்கும் உபகரணங்களுடன் நால்வர் கைது! samugammedia

போலித் தங்க ஆபரணங்கள் தயாரிக்கும் இயந்திரம் மற்றும் போலி ஆபரணங்கள் மற்றும் ஆபரணங்களை உருக்குவதற்கு பயன்படுத்தும் உபகரணங்களுடன் நால்வர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை வங்கியின் புத்தளம் கிளையில் ஒருவர் நேற்று பழைய தங்க ஆபரணங்களுடன் போலி ஆபரங்களையும் அடகு வைத்துள்ளார்.


பின்னர் வங்கியின் முகாமையாளர் ஆபரணங்களை பரீட்சித்துப் பார்த்தபோது போலி ஆபரணங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த முறைப்பாட்டிற்கமைய புத்தளம் தலைமையக பொலிஸ் அதிகாரியின் பணிப்புரைக்கமைய பிரதான சந்தேக நபர் உற்பட நான்கு பேர் குற்றத் தடுப்புப் பொலிஸ் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து விசாரணைகளை மேற்கொண்டபோது தங்க ஆபரணங்கள் செய்யும் இயந்திரத்தின் மூலம் Tugstan எனும் உலோகப்பொருளினால் குறித்த போலி ஆபரணங்களைத் தயாரித்துள்ளதாக தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

இதன் போது சந்தேக நபர்களின் வீட்டினை சோதனைக்குற்படுத்தியபோது போலி ஆபரணங்கள் தயாரிக்கும் இயந்திரம், ஆபரணங்களை உருக்குவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் போலி ஆபரணங்கள் தயாரிக்கும் அளவு அச்சுக்கள் என்பன சிக்கியுள்ளன.

இது போன்று ஏழு வங்கிகளில் இவ்வாறு போலி நகைகளை அடகு வைத்துள்ளதாக சந்தேக நபர்கள் விசாரணைகளின் போது தெரிவித்ததாக குற்றத்தடுப்புப் பொலிஸ் பிரிவினர் தெரிவித்தனர்.

அத்துடன், புத்தளம் மற்றும் பாலாவி இலங்கை வங்கி கிளைகளிலிருந்து முறைப்பாடுகள் கிடைக்கெப்பெற்றுள்ளதாகவும் மீதமுள்ள வங்கிகளில் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் தெரிவித்தனர்.

குறித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் சிராம்பையடி பகுதியைச் சேர்ந்தவரெனவௌம் ஏனையவர்கள் மணல்குன்று, மற்றும் சின்ன நாகவில்லு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களிடமிருந்து தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *