பறாளாய்க்கு சங்கமித்தை வரவுமில்லை – அரசமரம் நடவுமில்லை – சுகாஸ் தெரிவிப்பு! samugammedia

வடகிழக்கெங்கும் தங்களது கைவரிசையைக் காட்டிவரும் சிங்களப் பேரினவாதமும் தொல்லியல் திணைக்களமும் கடைசியாக வட்டுக்கோட்டையில்  கை வைத்துள்ளனர்.

தமிழீழப் பிரகடனம் உட்பட பல்வேறு பிரகடன்களை நிறைவேற்றிய இம்மண்ணில் கைவைத்தது முழுப்பிழை. ஆனால் இந்த மண்ணில் மீண்டுமொருமுறை சிங்கள பௌத்த பேரினவாதம்  சங்கமித்தை அரசமரம்  நட்டதாக பொய்யான புனைகதைகளைக்  கூறிக்கொண்டு பறாளாய் முருகளையும் பிள்ளையாரையும் ஆக்கிரமிக்கப் பார்க்கின்றனர். 

மாகாவம்சம் மற்றும் தீபவம்சம் ஆகியன பொய்யென  மீண்டும் சிங்களப் பேரினவாதத்திற்கு வரலாற்றைக் கற்பிக்க வேண்டிய தேவையுள்ளது.   இதேவேளை சங்கமித்தா கி.மு 3 ம் நூற்றாண்டில் இலங்கைக்கு வந்தார். ஆயினும்  பறாளாய் முருகன் கி.பி 15 ம நூற்றாண்டிலே கட்டப்பட்டுள்ளது.  ஆகவே 1800 வருடத்திற்கு முன் சங்கமித்தை வந்ததென கூறும  தீங்கள் தான் வந்தேறுகுடிகள் என நீங்களே குறிப்பிடுகின்றீர்கள்.  

மேலும் சிங்கள பௌத்த பேரினவாதமும் தொல்லியல் திணைக்களமும் எமது மண்ணை ஆக்கிரமி்க முயற்சித்தால்  ஜனநாயக முறையி் மக்களைத் திரட்டி கடுமையான எதிர்ப்பை வெளியிடுவோம்.  எனவே பறாளாய்க்கு  சங்கமித்தை வரவுமில்லை அரசமரம் நடவுமில்லை எனத்  தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *