228 கிலோ கேரளக் கஞ்சாவுடன் சந்தேகநபரை மடக்கிப் பிடித்த வட்டுக்கோட்டை மக்கள்! samugammedia

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, பொன்னாலை பகுதியில் வைத்து கேரளக் கஞ்சாவுடன் 31 வயதுடைய சந்தேகபர் ஒருவர் நள்ளிரவு வேளை வட்டுக்கோட்டை மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.

எழுது மட்டுவாழ் பகுதியை சேர்ந்த இருவர் உட்பட மூவர் இவ்வாறு கஞ்சாவை எடுத்துச் செல்லும்போது , சந்தேகமான முறையில் வீதியில் சென்ற கையேஸ் வாகனத்தை வட்டுக்கோட்டை – பொன்னாலை பகுதி மக்கள் வழிமறித்து சோதனையிட்டனர்.

இதன் போது வாகனத்தில் 227 கிலோ 918 கிராம் எடையுள்ள கஞ்சா இருப்பது அவதானிக்கப்பட்டது. இதன்போது வாகனத்தில் இருந்த எழுதுமட்டுவாழ் பகுதியைச் சேர்ந்த இருவர் தப்பிச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் அவ்வழியே வந்த கடற்படையினருக்கு மக்கள் விடயத்தை தெரியப்படுத்தினர். அவர்கள் கஞ்சாப் பொதிகள் மற்றும் வாகனம் என்பவற்றுடன் சந்தேகநபரை கைது செய்து வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் சந்தேக நபரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மெற்கொள்ளப்பட்டு வருகின்றது. வட்டுக்கோட்டை பகுதி மக்களின் இந்த முன்மாதிரியான துணிகர செயற்பாட்டை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *