சாரதி மீது தாக்குதல் மேற்கொண்டு காரை கொள்ளையடித்துச் சென்ற கும்பல்! samugammedia

இரத்தினபுரி, அயகம பிரதேசத்தில் சாரதி மீது தாக்குதல் மேற்கொண்டு விட்டு வாடகை கார் ஒன்று கொள்ளையிடப்பட்டுள்ளது.

அயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள வீதியில் ஒருவர் சுயநினைவின்றி காணப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

அதன்படி குறித்த நபரை பொலிஸார் சிகிச்சைக்காக அயகம வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். 

வாடகைக்கு வாகனங்கள் சேவைக்கு விடும்  நிறுவனமொன்றின்  சாரதியாக கடமையாற்றி வரும் கொலன்னாவ பிரதேசத்தைச் சேர்ந்த நபர்  மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சந்தேக நபர்கள் இருவர் காரை  வாடகைக்கு பெற்றுக் கொண்டு குறித்து சாரதியுடன் பயணித்துள்ளனர். 

இடைநடுவில் சந்தேகநபர்கள் சாரதிக்கு யோகட் குளிர்பானத்தை அருந்துவதற்கு வழங்கியுள்ளனர். 

இருப்பினும் சாரதி குறித்த பானத்தை அருந்துவதற்கு முடியாது என கூறிய போதிலும், அவர்கள் பலவந்தமாக அதை அருந்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்நிலையில் சந்தேகநபர்கள்  அயகம பகுதியில் வைத்து   சாரதிக்கு  ஆயுதத்தை காண்பித்து அச்சுறுத்தியுள்ளதுடன் 02 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பணப்பையொன்றையும் பறிமுதல் செய்துள்ளதுடன், சாரதியை காரில் இருந்து வெளியே தள்ளிவிட்டு   காரையும் எடுத்துச் சென்றுள்ளனர்.

சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை அயகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *