வீழ்ந்து நொருங்கிய இலங்கை விமானப்படையின் விமானம்..!திருமலையில் சற்றுமுன் அனர்த்தம்..!samugammedia

விமானப்படையின் பயிற்சி விமானம் ஒன்று சின்னவராய முகாம் பகுதியில் விழுந்து நொறுங்கியுள்ளது.

விமானப்படை சீனவராய கல்லூரியில் அமைந்துள்ள இலக்கம் 01 பறக்கும் பயிற்சி பிரிவின் விமானிகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட PT 6 ரக விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது.

இன்று (07) முற்பகல் 11.25 மணியளவில் சீனாவராய விமானப் பாதையில் இருந்து விமானச் சோதனைக்காகப் புறப்பட்ட விமானம் முற்பகல் 11.27 மணியளவில் விமானப்படைத் தளம் சீனாவராய பகுதியில் விழுந்து நொறுங்கியது.

விமான சோதனைக் கடமைகளுக்காக அங்கு பயணித்த விமானி மற்றும் பொறியியலாளர் ஆகியோர் விபத்தில் உயிரிழந்துள்ளதாக விமானப்படை ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ ஏற்கனவே விசேட விசாரணைக் குழுவொன்றை நியமித்துள்ளதுடன், புலனாய்வாளர்கள் அதற்கான பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *