தளபதியை காக்கா , கழுதை என சாடிய ரஜினி : கொந்தளிக்கும் ரசிர்கள்

ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேசிய விஷயங்கள் விஜய் ரசிகர்களிடம் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. காக்காவுக்கு கழுகு மாதிரி மேலே பறக்க முடியவில்லை என்று பொறாமை. அந்த கழுகை போய் கொத்தும். அந்த கழுகோ ஒன்னும் பண்ணாது, இன்னும் மேலே பறக்கும். காக்கா விடாது இன்னும் மேலே போகும். ஆனால் அதனால் மேலே போக முடியாது. நம்மை யாராவது வெறுக்கிறார்கள் என்று சொன்னால் நம் உழைப்பால், மௌனமாக இருந்து போய்க்கிட்டே இருக்கணும்.

ரஜினி சொன்ன காக்கா, கழுகு கதை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அவர் விஜய்யை தான் சீண்டும் காக்கா என்கிறார், குரைக்கும் நாய் என்கிறார் என பேச்சு கிளம்பியது. சோஷியல் மீடியாக்களில் ரஜினி, விஜய் ரசிகர்களுக்கு இடையேயான மோதல் மிகப்பெரிய அளவில் வெடித்து வருகிறது. இந்த சண்டைகள் எப்போதும் ஓயும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் ஆர்ட் டைரக்டர் கிரண் என்பவர் ரஜினி மீது விஜய்க்கு உள்ள மரியாதை குறித்து நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

 

நெல்சனிடம் ‘ஜெயிலர்’ பட ஷீட்டிங்கை சீக்கிரமே துவங்க சொன்னது விஜய் தான் என கூறியுள்ளார். மேலும், ‘வாரிசு’ பட ஷீட்டிங் ஸ்பாட்டுக்கு சென்ற போது, அங்கிருந்த விஜய் தன்னிடம் வந்து, தலைவர் எப்படி இருக்காரு? நல்லாருக்காருல? ஆக்டிவா இருக்காருல? என கேட்டுள்ளார். ரஜினியை தலைவர் என குறிப்பிட்டுள்ள விஜய் பேசியுள்ளது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதனால் சூப்பர் ஸ்டார் பட்டம் தொடர்பான ரசிகர்களிடையேயான சண்டைகள் முடிவுக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் ஒரு மேடையில் தான் எப்போதும் தளபதியாகவே இருக்க விரும்புவதாக கூறிய விஷயம் தான் அது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஒரு விருது வழங்கும் விழாவில் விஜய்யிடம், உங்களுக்கு பிடித்த டைட்டில் எது என கேள்விகேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த விஜய், நான் எப்போதும் பழசை மறக்க மாட்டேன். எனக்கு ரசிகர்கள் வைத்த இளைய தளபதி டைட்டில் தான் வேண்டும். சூப்பர்ஸ்டார் டைட்டில் மீது எனக்கு ஆசை இல்லை என கூறியுள்ளார். இதையடுத்து விஜய்யே சூப்பர்ஸ்டார் டைட்டிலுக்கு ஆசைப்படவில்லை. பிறகு ரசிகர்கள் ஏன் மோதலில் ஈடுபடவேண்டும் என சிலர் கூறி வருகின்றனர். விஜய் ரசிகர்கள் ஒரு சிலர் எங்கள் தளபதிக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் இல்லையென்றாலும் தளபதி தான் கெத்து என்று கூறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *