வட மத்திய மாகாண கல்வி அமைச்சின் மேலதிக செயலாளரும், வவுனியா வடக்கு பிரதேச செயலக முன்னாள் பிரதேச செயலாளருமான க.பரந்தாமன் கோவிட் தொற்றால் இன்று (16) காலை மரணமடைந்துள்ளார்.
கோவிட் தொற்று காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இறுதிக்கிரியைகள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இன்று (16) பி.ப 1.30 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் நடைபெற்றன.
யுத்த காலத்திலும், மீள்குடியேற்றத்திற்கு பின்னரும் பல்வேறு அச்சுறுத்தலுக்கு மத்தியிலும், குண்டு வெடிப்புக்களுக்கு மத்தியிலும் மக்களுடன் மக்களாக நின்று வவுனியா வடக்கு பிரதேசத்தை கட்டியெழுப்புவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை இவர் முன்னெடுத்து நீண்ட காலம் அங்கு பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.