
உக்ரைன், பெப்.16
உக்ரைனில் வங்கிகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையத்தளம் சைபர் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
உக்ரைனின் தகவல் பாதுகாப்பு மையம் கூறுகையில்,
உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் இரண்டு வங்கிகளின் இணையதளங்கள் முடக்கப்பட்டு உள்ளன. அதில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டு ஹேக்கர்கள் ஊடுருவி உள்ளனர்.
ரஷ்யாவை சேர்ந்த சைபர் குழு உக்ரைன் அரசின் இணையதளத்தை முடக்கி உள்ளன. பிரைவாட்-24 வங்கி மிக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்துள்ளது.
முடக்கப்பட்ட உக்ரைன் பாதுகாப்பு அமைச்சக இணையதளத்தை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.