யாழ், பல்கலையில், புவியியல் துறையின் விரிவுரையாளர் பிரதீபராஜா எழுதிய 3 நூல்கள் வெளியீடு! samugammedia

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்  மூன்று நூல்களும் இன்று(9) வெளியிட்டு வை்கப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா எழுதிய காலநிலை மாற்றம்  , அனர்த்த முகாமைத்துவம் , HydroClimate of Northern Sri Lanka ஆகிய மூன்று நூல்களும் இன்று(9) வெளியிட்டு வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாயபதி கலையரங்கில் மாலை 2.00மணியளவில் இடம்பெற்ற நிகழ்வில்  பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக, கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் அவர்களும், புவியியற்றுறை முன்னாள் தலைவர் பேராசிரியர் கா.குகபாலன் அவர்களும், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் வடக்கு மாகாணத்தின் பிராந்திய முகாமையாளர், பொறியியலாளர் ஏ.ஜெகதீசன் அவர்களும்  கலந்துகொண்டனர்.


இன்று வெளியிடப்பட்ட மூன்று நூல்களின் நூல்களின் முதற் பிரதிகளை நூலாசிரியரின் சகோதரர் நாகமுத்து நவனீதராஜா  பெற்றுக்கொண்டார். இந் நிகழ்வில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்  மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *