ஹவாய் தீவில் ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீ காரணமாக, கடலில் குதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது.
அமெரிக்காவின் தீவு மாகாணமான ஹவாயின் மவுயி, நகரில காடுகளில் ஏற்பட்ட தீ நகருக்குள் பரவியது. இதனால், வீடுகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டன. 2 ஆயிரம் ஏக்கர் மேற்பட்ட நிலங்கள் தீயில் எரிந்து கருகின.
இந்த காட்டுத்தீயில் இருந்து தப்பிக்க பலர் கடலில் குதித்துள்ளனர். இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் தீயை கட்டுப்படுத்தும் பணி மற்றும் மீட்புப்பணியிலும் அமெரிக்க கப்பற்படை, விமானப்படை மற்றும் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.