வட மாகாண ரீதியிலான 2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளுக்கு இடையிலான பளு தூக்கல் போட்டி நேற்று 9 ஆம் திகதி யாழ்/மத்திய கல்லூரியில் இடம்பெற்ற போட்டியில் பங்குபற்றி வவுனியா மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.
வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய மாணவிகள் இரண்டு தங்க பதக்கங்களும், ஒரு வெள்ளி பதக்கமும் பெற்று சாதனை படைத்துள்ளனர். நடேஜினி ஆசிரியர் பயிற்றுவிப்பாளராக இருந்திருந்தார்.
வவுனியா பெரிய கோமரசங்குள மாணவிகள் இருவர் பங்குபற்றி ஒரு வெள்ளி பதக்கமும், ஒரு வெண்கலப் பதக்கமும்பெற்று சாதனை படைத்துள்ளனர். அம்பிகா ஆசிரியர் பயிற்றுவிப்பாளராக இருந்திருந்தார்.
இவ் வெற்றிக்கு ஞானகீதன் ஆசிரியர் இவர்களிற்கு பயிற்சியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.