
கொழும்பு, பெப் 16: முறையாக வரி செலுத்தாமல் சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்ட பெருந்தொகை சிகரெட் பெட்டிகளுடன் நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் கொழும்பு- 12 ஐ வசிப்பிடமாக கொண்ட 49 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கெசல்வத்தை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.