முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்திற்கு அண்மித்த பகுதிகளில் வாகன தரிப்பிடம் இல்லாததனால் நீதிமன்றிற்கு வரும் பொதுமக்கள் மற்றும் பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் A31 பிரதான வீதியில் இருப்பதனால் நீதிமன்றத்திற்கு முன்பாக அதிகமான வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதனால் நீதிமன்ற தேவையின் நிமிர்த்தம் வரும் பொதுமக்கள் வாகனங்களை வீதியின் இருமருங்குகளிலும் நிறுத்திவிட்டு செல்கின்றனர்.
இதனால் பயணிகளும் போக்குவரத்து மேற்கொள்வதில் பெரும் சிரமத்தினை எதிர்நோக்கியுள்ளனர்.
குறித்த பகுதியில் வாகன தரிப்பிடம் இல்லாததனால் விபத்துக்கள் ஏற்பட கூடிய அதிக வாய்ப்புக்கள் இருப்பதனால் நீதிமன்றத்திற்கு முன்பாகவோ அல்லது அண்மித்த பகுதிகளிலோ வாகன தரிப்பிடம் ஒன்றினை அமைக்க உரிய அதிகாரிகள் கவனத்தில் எடுத்து அதனை அமைத்து தருமாறும் நீதிமன்றிற்கு வரும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





