இறக்குமதி செய்யப்பட்ட 03 கார்களை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து விடுவித்து தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் மூன்று பேரிடம் இருந்து 6.2 மில்லியன் ரூபாவை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தலவத்துகொடை பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.