சிறுவர்களின் ஆபாச பட விவகாரத்தில் ஆசிரியருக்கு 12 ஆண்டுகள் சிறை

இந்திய சிறுவர்களின் ஆபாச பட விவகாரத்தில் பிரித்தானியாவைச் சேர்ந்த  ஸ்மித் என்ற  35 வயதான ஆசிரியருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் இந்தியாவில் 13 வயதுக்குட்பட்ட சிறுவர்களை பாலியல் வன்கொடுமை செய்து அது தொடர்பான  படங்களையும் வீடியோக்களையும் அனுப்புவதற்காக இந்தியாவில் உள்ள இரண்டு இளைஞர்களுக்கு 66,000 பவுண்டு (இந்திய மதிப்பில் 69 லட்சம் ரூபாய் ) பணம் வழங்கியுள்ளார்.

அத்துடன்   13 வயதுக்குட்பட்ட சிறுவர்களைப்  பாலியல் பலாத்காரம் செய்வதை ஊக்குவித்தல்,  சிறுவர்களின் ஆபாச படங்களை தயாரித்து விநியோகித்தல், நாயுடன் உடலுறவில் ஈடுபடுதல் உள்ளிட்ட 22 குற்றங்களில் ஈடுபட்டுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

குறித்த நபர் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் இக் குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ள நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு லண்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது ஸ்மித்திடம் பறிமுதல் செய்யப்பட்ட கணினி மற்றும் தொலைபேசிகளில் இருந்து 120,000 க்கும் மேற்பட்ட குழந்தைகளின் ஆபாச படங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ள நிலையில் லண்டன் நீதிமன்றம் ஸ்மித்துக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Leave a Reply