கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நிமல் லான்சா இராஜினாமா செய்யத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சில் இடம்பெற்று வரும் செயற்பாடுகள் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டே அவர் இந்த தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.
அத்துடன் தனது அமைச்சில் இருந்து தன்னுடைய தனிப்பட்ட உடமைகளை அகற்றியுள்ளார்.
இதேவேளை அவர், தனது ஊழியர்களிடம் அவர்களின் சுயமரியாதையைப் பற்றி அமைதியாக இருக்க வேண்டிய நேரம் இது என்றும் கூறியுள்ளார்.
மேலும், பல்வேறு ஆணைக்குழுக்களில் முறைகேடுகள் நடந்தால் அதற்கு பதில் அளிக்க தாம் நேரில் ஆஜராக முடியாது என்றும் நிமல் லான்சா தெரிவித்துள்ளார்.
அண்மையில் திறந்துவைக்கப்பட்ட மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் ரம்புக்கன கலகெதர பகுதிக்கான திறப்பு விழாவில் தான் கலந்து கொள்ளவில்லை எனவும், அந்தப் பகுதியின் நிர்மாணப் பணிகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்தும் கவலை வெளியிட்டார்.