எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 16இல் தேர்தல்..! வெளியான அறிவிப்பு..!samugammedia

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 16 ஆம் திகதி இலங்கை காற்பந்தாட்ட சம்மேளத்திற்கான தேர்தலை நடத்த அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்நிலையில் தேர்தல் நடத்தப்படுவதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அனுமதியை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க வழங்கியுள்ளார்.

இதன் காரணமாக கால்பந்தாட்ட சம்மேளனத்திற்கான தேர்தலுக்காக சகல தரப்பினரும் தடையின்றி முன்னிலையாக முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் சர்வதேச போட்டி தடை நீக்கப்பட்டு, இலங்கை தேசிய காற்பந்தாட்ட அணிக்கு உலக கிண்ண காற்பந்தாட்ட போட்டிக்கான தகுதிகாண் போட்டியில் பங்கேற்க அனுமதி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply