நல்லூர் ஆலய வளாகத்தில் விசேட கண்காணிப்பு கமராக்கள்..! மாநகரசபை நடவடிக்கை..!samugammedia

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசாமி ஆலய வருடாந்த உற்சவம்  எதிர்வரும் 21 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ள நிலையில் ஆலய வளாகத்தில் இடம்பெறும் திருட்டுக்கள் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்காக யாழ் மாநகர சபையினால் 50க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டு குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக யாழ் மாநகர சபையின்  ஆணையாளர் தெரிவித்தார்.

நல்லூர் கந்தன் ஆலய திருவிழா முன்னேற்பாடுகள் தொடர்பான கூட்டம் ஒன்று  யாழ். மாநகர சபையில் இன்றுகாலை நடைபெற்றது.

இதன்போது புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைகள்  தீர்மானங்கள் தொடர்பிலும் பொது மக்களுக்கான அறிவுறுத்தல் தொடர்பிலும் மாநகர சபையின் ஆணையாளர் த.ஜெயசீலன் கருத்து வெளியிடும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

Leave a Reply