13ஆவது திருத்தம் குறித்த நிலைபாட்டை கோட்டாபய அறிவிக்க வேண்டும்- சன்ன ஜயசுமண கோரிக்கை! samugammedia

13வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

குறித்த திருத்தத்திற்கு எதிராக ஆணை பெற்று ஆட்சிக்கு வந்த கோட்டாபய ராஜபக்ச, பதின்மூன்றாவது திருத்தத்தை அமுல்படுத்துவதற்குத் தயாராகும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயற்பாடு தொடர்பில்  மௌனமாக இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் அவர் கூறுகிறார்.

மேலும் நாட்டின் ஐக்கியத்தை உறுதிப்படுத்தவும் அதற்காகவே புதிய அரசியலமைப்பை கொண்டு வரவும்  கோட்டாபய ராஜபக்ஷ அறுபத்தொன்பது இலட்சம் மக்களின் ஆணை பெற்றதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply