யாழில் தொடர் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு! samugammedia

ஐந்து நாட்கள் தொடர் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

கோண்டாவில் மேற்கு கோண்டாவில் பகுதியை சேர்ந்த நாராயணசாமி – கோவர்த்தனன் (42) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தொடர்ந்து 5 நாட்கள் காய்ச்சல் ஏற்பட்டிருந்த நிலையில் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றும் குறையாத நிலையில் நேற்று (11) காலை யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இவ்வாறு அனுமதிக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

குறித்த மரணம் தொடர்பில் யாழ் போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மரண விசாரணையினை மேற்கொண்டு பிரேத பிரிசோதனைக்கு உத்தரவிட்டார். 

பிரதே பரிசோதனைக்கு பின்னர் உடலம் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Leave a Reply