இலங்கையில் 90 சதவீதமானோர் சாதியப் பாகுபாட்டை ஏற்றுக்கொள்கின்றனர்- பெண்கள் உரிமைகள் செயற்பாட்டாளர் உதயணி! samugammedia

இலங்கையில்  90 சதவீதமானோர் சாதியப் பாகுபாட்டை ஏற்றுக்கொள்கின்றனர் என பெண்கள்  உரிமைகள் செயற்பாட்டாளர் நவரட்ணம் உதயணி தெரிவித்துள்ளார்.

இன்று மாலை 4.00 மணியளவில் தந்தைசெல்வா கேட்போர் கூடத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,, 

எமது சமூகதில் பொதுத் தளங்களில் சாதியம் தவிர்க்கப்படுகின்றது. சாதியக் கட்டமைப்புக்களானது சாதியப் பாகுபாடானது மனிதனால் வகுக்கப்பட்டபோதும் இலங்கையில் இதனை 90 சதவீதமானோர்  ஏற்றுக்கொள்கின்றனர்.

தென்னாசியாவில் 20 சதவீதமானோர் சாதியம் சார் ஒடுக்குமுறைகளை எதிர்கொள்கின்றனர். 

பொதுப் போக்குவரத்து , பொதுக்கிணறு பாவனை  மற்றும் ஆலயங்களினுள் உட்பிரவேசம்  போன்ற ன சாதியப் பாகுபாட்டால் ஆரம்ப காலங்களில் பிரச்சினை நிலவியது.

சில சாதியக் கட்டமைப்புக்கள்  சமயத்தின் மூலம் தோற்றம் பெற்றதெனவும் சிலர் சமூக பொருளாதார கட்டமைப்பினூடாக உருவாக்கப்பட்டது என கோட்பாடுகள் கூறுகின்றன. இந்திாவில் குறிப்பாக சமயத்தை அடிப்படையாகக் கொண்டே சாதியக் கட்டமைப்புக்கள் காணப்படுகின்றன.

ஆரம்பத்தில் ஒடுக்கப்பட்ட சாதிப் பிரிவினர் கல்வி கற்க அனுமதிக்கப்படாத போதிலும் பிற்காலத்தில் மிசனரிக் கல்வி முறை , இலவசக் கல்வி முறை அறிமுகத்தால் இந்நிலை மாற்றமடைந்தது.

இதேவேளை யுத்த காலத்தில்  கலப்பு முறை சாதி திருமணங்கள் பெரும்பாலும் இடம்பெற்றது.  இவற்றுடன் அரசியலிலும் சாதியத்தின் வகிபாகம் மிக முக்கியமானதாகக் காணப்படுகின்றது-  எனத் தெரிவித்தார்.

Leave a Reply