இராணுவ முகாமை அகற்றாதே…!யாழ் கற்கோவளம் பிரதேச மக்கள் சிலர் ஆர்ப்பாட்டம்..!samugammedia

வடமராட்சி பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் உள்ள இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் எனக் கூறி பிரதேச மக்கள் சிலர் இராணுவ முகாமுக்கு முன்னால் இன்று(14) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொலீசார் மீது நம்பிக்கை இல்லை,பருத்தித்துறை பொலிசார் கஞ்சா கடத்தல்காரர்களுடன் தொடர்பு வைத்து சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதில்லை என மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

யாழ் மாவட்ட இராணுவ தளபதி அவர்களே தற்கோவளம் பகுதியில் அமைந்துள்ள 4வது சிங்கறெஜிமென்ட  படையணி இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் எனக் கோரி இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply