இடைநிறுத்தப்பட்ட பேருந்து உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த புதிய அமைப்பு சங்கம் நடவடிக்கை 

வவுனியா நெளுக்குளம் பகுதியில் பதியப்படாத பேருந்து உரிமையாளர்கள் இணைந்து புதிதாக மணிகண்டன் போக்குவரத்து சேவைகள் சங்கம் என புதிய சேவை ஒன்றினை இன்றைய தினம் ஆரம்பித்துள்ளனர்.

கிராம மட்டங்களில் உள்ள பதியப்படாத பேரூந்துகள் அதாவது சில நிறுவனங்களை நம்பி ஒப்பந்தம் கைச்சாத்திடாமல் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தி பின்னர் குறித்த நிறுவனங்கள் பேருந்து சேவைகளை இடைநிறுத்தி விடுகின்றனார்.

அவ்வாறு இடைநிறுத்தப்பட்ட பேருந்துகளை ஒன்றுதிரட்டி புதிதாக ஒன்று சேர்த்து உரிய முறையில் பிரதேசசபை, கிராம அலுவலர் அனுமதி பெற்று மாவட்ட அலுவலகத்தினரின் அனுமதியை பெற்று இச் சங்கம் இன்று (16) பயன்தரும் வகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

45 வாகன உரிமையாளர்களை ஒன்று சேர்த்து இச்சங்கம் உருவாக்கப்ட்டுள்ளது. இதன் மூலம் எமக்கு வருகின்ற பாடசாலை சேவைகள், திருமண விழாக்கள், ஏனைய நிகழ்வுகளுக்கு வாகனங்கள் தேவையாயின் எம்முடன் தொடர்புகாெண்டால் அவர்களுக்கு தேவையான சேவைகளை நாம் வழங்கும் நோக்குடனே ஆரம்பித்திருக்கின்றோம்.

அத்துடன் கொரோனா காரணமாக எமது வாழ்வாதாரம் பின்தங்கியுள்ளது. எனவே எமது வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்குடனயே இச் சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆரம்பிப்பு நிகழ்வில் வவுனியா தெற்கு பிரதேசசபை தவிசாளர் த. யோகராசா , நெளுக்குளம் கிராம சேவையாளர் எஸ் . சாந்தரூபன் , தனியார் பேருந்து உரிமையாளர் சங்க தலைவர் இ. ராஜேஸ்வரன், முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தலைவர் ரவீந்திரன், பார ஊர்திகள் சங்க தலைவர், பிரதேச சபை உறுப்பினர் மற்றும் குறித்த சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அத்தோடு இச்சங்கத்தின் தலைவராக அமுதலிங்கம் அன்பரசன், செயலாளர் பி.பரந்தாமன், பொருளாளர் டனுசன் என 15 நிர்வாக உறுப்பினர்கள் கொண்டு 45 பேருந்து உரிமையாளர்களின் ஒத்துழைப்புடனும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் வைரஸ் தொற்றும் அபாயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *