பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்தை வடக்கு மக்கள் விரும்பவில்லை..!நாரங்கபானவே ஆனந்த தேரர்..!samugammedia

பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்தை வடக்கு மக்கள் விரும்பவில்லை என்பதை அரசியல் பொறுப்புள்ளவர்கள் ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டும் என அஸ்கிரி பீடத்தின் பிரதிப் பதிவாளர் நாரங்கபானவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தென்னிலங்கை மக்களின் பொருளாதார, கல்வி, சுகாதாரத் தேவைகள் வடபகுதி மக்களுக்கே தேவை என்பது நாட்டின் ஒட்டுமொத்தப் பிரச்சினை என்பதை அனைவரும் புரிந்து
கொள்ள வேண்டும் என அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

பதின்மூன்றாவது அரசியலமைப்பு திருத்தம் ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தனவின் ஆட்சிக்காலத்தில் இந்திய அரசாங்கத்தினால் பலவந்தமாக எமது நாட்டுக்கு வழங்கப்பட்டதேயன்றி இந்நாட்டு மக்களின் தேவைக்காக ஸ்தாபிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இப்போதும் கூட வடக்கு-கிழக்கில் சிங்கள மக்களுக்கு நடக்கும் பல்வேறு அநீதிகள் பற்றி யாரும் பேசுவதில்லை.அண்மைக்காலமாக கிழக்கு மாகாணத்தில் புத்தசாசன அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட விகாரைகள் கட்டப்படுவதைக் கூட அப்பிரதேசத்தின் தமிழ் அரசியல் தலைவர்களின் செல்வாக்கின் பேரில் அதிகாரிகள் எவ்வாறு செயற்பட்டுள்ளனர் என்பதை காணலாம்.

இத்தகைய பின்னணியில் 13+ நடைமுறைப்படுத்தப்பட்டால், எவரும் சிரமமின்றி நிலைமையைப் புரிந்து கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply