தொண்டமனாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம் நாளை ஆரம்பம்..!samugammedia

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம் நாளை ஆரம்பமாகவுள்ளது.

நாளை பிற்பகல் 3:00 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் மகோற்சவம் எதிர்வரும் 20 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை  காலை  7:00 மணிக்கு காலை திருவிழாவும், 25 ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9:00 மணிக்கு பூங்காவனத் திருவிழாவும், மறுநாள் 26 ம் திகதி காலை 8:00 மணிக்கு கைலாச வாகனத் திருவிழாவும்,  29 ம் திகதி  செவ்வாய்க் கிழமை மாலை 6:00 மணிக்கு  சப்பறத் திருவிழாவும், 30 ம் திகதி புதன்கிழமை காலை எட்டு மணிக்கு தேர்த் திருவிழாவும், 31 ம் திகதி வியாழக் கிழமை தீர்த்த திருவிழாவும், இடம் பெறவுள்ளன.

பக்தர்களின் வசதிகருதி விசேட போக்குவரத்து, பாதுகாப்பு,  சுகாதார வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

உற்சவகாலங்களில் ஆலய சூழலில்  உள்ள அன்னதானம் இடம்பெறவுள்ளது.

Leave a Reply