சூட்சுமமாக மறைத்து கடத்தப்பட்ட தேக்கம் மரக் குற்றிகள் மீட்பு! samugammedia

முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு மகேந்திரா வானத்தினுள் சூட்சும்மாக மறைத்து கடத்தப்பட்ட தேக்க மரக் குற்றிகளை   யாழ். சாவகச்சேரி பொலிஸார்  மீட்டுள்ளனர்.

சாவகச்சேரி நகர் பகுதியில் வைத்து இன்று பிற்பகல் 2:30 மணியளவில் தேக்கம் குற்றிகள் மீட்க்கப்பட்டதாக  சாவகச்சேரி தெரிவித்தனர்.

ஒல்லித் தேங்காய் குவியலுக்குள் மறைத்து கொண்டு சென்ற வேளையிலேயே மரக் குற்றிகள் மீட்க்கப்பட்டுள்ளன.

இதன் போது சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

3 இலட்சம் பெறுமதியான 13 தேக்க மர க்குட்டிகளே இவ்வாறு மீட்க்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவைச் சேர்ந்த 33வயதான சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும் சாவகச்சேரிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply