யாழ்ப்பாணம் நாவற்குழி சந்தியில் சற்றுமுன் இடம்பெற்ற விபத்தில் ஆணொருவர் ஸ்தலத்திலே உயிரிழந்துள்ளதுடன் பெண்ணொருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.
பொலிஸாரின் பவுசர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதாலேயே குறித்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை பவுசர் வாகனத்துடன் மோதிய மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் மன்னாரைச் சேர்ந்தவர்கள் என அறியமுடிகின்றது.