டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு -34 பேர் உயிரிழப்பு! samugammedia

2023 இல் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 60,000 ஐ தாண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொற்றுநோயியல் பிரிவின் அறிவிப்பின் படி, கடந்த ஜூலை மாதம் 19ஆம் திகதிவரை மொத்தம் 60,136 வழக்குகள் பதிவாகியுள்ளன,  மேல் மாகாணத்தில் கிட்டத்தட்ட 30,000 வழக்குகள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறிப்பாக கொழும்பு மாவட்டத்தில் 12,886 வழக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், டெங்கு நோய் பரவும் இடங்கள் அதிகமாக காணப்படும் 43 பகுதிகளை அதிக  ஆபத்துள்ள பகுதிகளாக MOH  அடையாளப்படுத்தியுள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் 3,446 டெங்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையில், ஜனவரி 2023 முதல் மொத்தம் 38 இறப்புகள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply