கடும் நடவடிக்கைக்கு தயாராகும் இலங்கை வைத்தியர்கள்! வெளியான அதிரடி அறிவிப்பு samugammedia

பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால், வேறு வகையான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு வைத்தியர்கள் தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

வைத்தியர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக வைத்தியர்களை அச்சுறுத்தவே சுகாதார அமைச்சு முயற்சித்து வருவதாக  அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

எனவே, இப்பிரச்சினைகளுக்கு சுகாதார அமைச்சு உடனடி தீர்வினை வழங்காவிடின் எதிர்காலத்தில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே கூறியுள்ளார்.

எதிர்வரும் வாரத்தில் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால், வேறு வகையான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு வைத்தியர்கள் தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.   

Leave a Reply