வடக்கில் உள்ளூராட்சி மன்றங்களில் விசேட வேலைத்திட்டம்..! ஆளுநர் தலைமையில் ஆரம்பம்..!samugammedia

வடக்கு மாகாணத்திலுள்ள ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களும் தமது பிரதேசங்களை சுத்தமாக வைத்திருக்க விசேட வேலைத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் எனும் ஆளுநரின் வழிகாட்டலுக்கமைவாக இன்றைய தினம் தமது விசேட வேலைத்திட்டங்களை நல்லூர் மற்றும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைகள் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் ஆரம்பித்திருக்கின்றன.

இன்றையதினம்(21) காலை 7 மணியளவில் நல்லூர் பிரதேசசபைக்குட்பட்ட திருநெல்வேலிச்சந்தியிலே கழிவுத்தொட்டிகள் வைக்கும் நிகழ்வு ஆளுநரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து காலை 7.30 மணியளவில் வலிகாமம் கிழக்கு பிரதேசசபைக்கு  உட்பட்ட பிரதேசங்களில் ஆயிரம் மரங்களை நாட்டும் நிகழ்ச்சித்திட்டத்தின் முதலாவது மரம் செம்மணிச்சந்தியிலே ஆளுநரினால் நாட்டிவைக்கப்பட்டு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இவ்வேலைத்திட்டங்கள் ஆளுநரின் வழிகாட்டலுக்கமைவாக அந்தந்த பிரதேசங்களிலுள்ள பொதுமக்களுடன் இணைந்தே செயற்படுத்தப்படவுள்ளன.

அந்தவகையில் கழிவுத்தொட்டிகளை வைக்கும் நிகழ்ச்சித்திட்டத்திலே கழிவுத்தொட்டிகளுக்கு பொறுப்பாக கடைவியாபாரிகள் செயற்படவுள்ளனர்.

அதே போல் இந்த வேலைத்திட்டங்கள் முழுவதும் பொதுமக்களின் ஒத்துழைப்போடு அவர்களுடன் இணைந்து செயற்படுவதாகவே காணப்படும் என உள்ளூராட்சித்திணைக்களம் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *