கிளிநொச்சியில் தொடரும் சட்டவிரோத மணல் அகழ்வு…! பொதுமக்கள் குற்றச்சாட்டு..!samugammedia

கிளிநொச்சி மாவட்டத்தின் பல பிரதேசங்களில் சட்டவிரோத மணல் கட்டுப்படுத்தமுடியாத நிலையில கைமீறி செல்கிறது என பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.

நாளுக்கு நாள் இவ்வாறான சட்டவிரோத மணல் அகழ்வுகள் அதிகரித்துச் செல்கின்றது. குறிப்பாக கடலுக்கு அண்மையாக உள்ள கிராமங்களில் அதிகரித்துள்ள சட்டவிரோத மணல் அகழ்வு காரணமாக முழுக் கிராமமும் பாதிக்கப்படுகின்ற ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ள பிரதேச மக்கள் இவற்றை கட்டுப்படுத்த தவறின் தாம் தமத ஊர்களை இழந்து விடுவோம்
எனவும் கவலை தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் கல்லாறு, உமையாள்புரம் விளாவோடை,தட்டுவன்கொட்டி, இரணைமடுவும் அதனை அண்டிய பிரதேசங்களும், ஊரியான்,முரசுமோட்டை, பெரியகுளம், கிளாலி,உள்ளிட்ட பல பிரதேசங்களில் தொடர்ச்சியாக சட்டவிரோத  மணல் அகழ்வுகள் இடம்பெற்று வருகிறது.

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுப்படுகின்றவர்களின் விபரங்களை சம்மந்தப்பட்ட தரப்பினர்களுக்கு வழங்கினால் அன்றிரவு தங்கள் வீடுகள் தாக்கப்படுவது அல்லது தங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படுவது என அச்சுறுத்தல்களும் இடம்பெறுவதனால் பொது மக்களாகிய நாம் அமைதி காக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பல தடவைகள் குறித்த விடயம் பிரஸ்தாபிக்கப்பட்ட போதும் சரி மாவட்டத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு பல தடவைகள்  கொண்டு சென்ற போதும் இதுவரை எவராலும் எதுவும் நடக்கவில்லை என்று தெரிவிக்கும் பொது மக்கள் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுகின்றவர்களில் பெரும்பாலானவர்கள் அரசியல்
தரப்புகளின் செல்வாக்குள்ளவர்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply