கொழும்பு கடற்கரையில் இறந்த நிலையில் ஆமைகள்! samugammedia

மேற்கு கடற்கரையில் ஏழு ஆமைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 

இதன்படி ஒரு வாரத்திற்குள் கடற்கரையில் 12 இறந்த ஆமைகளின் சடலங்கள் குவிந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்று கண்டுபிடிக்கப்பட்ட ஆமைகளில் ஐந்து ஆமைகள் காலி முகத்துவார கடற்கரையிலும், மற்ற இரண்டு ஆமைகளின் சடலங்கள் வெள்ளவத்தை மற்றும் தெஹிவளை கடற்கரையிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த விலங்குகளின் மரணத்திற்கான காரணம் தொடர்பில் பிரேத பரிசோதனைகளை மேற்கொண்டு நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பெல்லன்வில கால்நடை வைத்தியருக்கு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply