வடமாகாணத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகள் குறித்து அமெரிக்கத் தூதுவர் ஜூலி ஜே. சுங் மகிழ்ச்சி! samugammedia

தற்போது வடமாகாணத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகள் மற்றும் மக்களின் அன்றாட வாழ்க்கைச் செயற்பாடுகள் தொடர்பில் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், வடக்கின் அபிவிருத்திக்கு அதிகபட்ச ஆதரவை வழங்குவதாகவும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர்  ஜூலி ஜே. சுங் கூறுகிறார்.

வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் இன்று (23.08.2023) ஆளுநர் அலுவலகத்தில் ஆளுநரைச் சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வடமாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து தூதுவருக்கு விளக்கமளித்த ஆளுநர், மீள்குடியேற்றம், விவசாயம், மீன்பிடி மற்றும் சுற்றுலா உள்ளிட்ட மக்களின் பொதுவான உட்கட்டமைப்புகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்துவதாக கூறினார்.

யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர், மக்களின் நல்வாழ்வுக்காக கடந்த சில வருடங்களாக அமுல்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்கள் குறித்த உண்மைகளை சுட்டிக்காட்டிய ஆளுநர், இலங்கையின் அன்றாட செயற்பாடுகள் மற்றும் அபிவிருத்திகளில் திருப்தியடைவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தெரிவித்தார். 


வடக்கு மாகாண மக்களுக்காக திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் இரண்டாவது தடவையாக வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை குறித்தும் அவருக்கு நல்வாழ்த்துக்களை அமெரிக்க தூதுவர் கூறியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *