கொழும்பு கோட்டை உலக வர்த்தக நிலையத்தின் இருபத்தைந்தாவது மாடியில் உள்ள துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை இராஜாங்க அமைச்சின் அலுவலகம் மின் கட்டணத்தை செலுத்தாத காரணத்தினால், சிவப்பு அறிவிப்புடன் 80 இலட்சம் ரூபாவுக்கான கட்டணப் பட்டியலை மின்சார சபை அனுப்பியுள்ளது.
தனது அலுவலக மின்சாரம் துண்டிக்கப்படும் என தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர குறித்த செய்தியை உறுதிப்படுத்தினார்.
துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு இது தொடர்பில் அறிவித்த போதும் இதுவரையில் கொடுப்பனவுகள் எதுவும் வழங்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.