சொப்பன சுந்தரி – இது வேற மாதிரி!

மாதவனின் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள ‘சொப்பன சுந்தரி’ திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது.

இந்த திரைப்படத்தில், கஜனன் கைலைநாதன், ஜேயல் செரீஷ், நரேஷ் நாகேந்திரன், தனுஷ் செல்வநாதன், ரவி, வருஹோன் துஷ்யந்தன், நிரஞ்சனி சன்முக ராஜா, பெர்லீஜா ஜெயராஜா, மெய்லிஸா என்டனி ஸ்டென்லி, ஜெனோஸன் ஜெயரட்ணம், ஜிகே, சன்ஜய் யோ ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு கதை மற்றும் திரைக்கதை ஜேயல் செரீஷ் அமைக்க சமல் எச். விக்ரமசிங்க ஒளிப்பதிவு செய்துள்ளார். துணை இயக்குனராக நரேஷ் நாகேந்திரன் பணிபுரிந்துள்ளார்.

இந்தப்படத்தை கஜனன் கைலைநாதன், ஜேயல் செரீஷ் மற்றும் மாதவன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இலங்கையில் வெளியாகும் முழு நீள தமிழ்த்திரைப்படம் இதுவென்பதால் இலங்கை சினிமா இரசிகர்கள் இந்த திரைப்படத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

 

Leave a Reply