வட பகுதி மாணவர்களின் ஆங்கில அறிவை மேம்படுத்துவதில் பிரிட்டிஷ் கவுன்சில் எவ்வாறு உதவி புரிகின்றது என்பது தொடர்பிலான கலந்துரையாடல் என்று ஆஸ்பத்திரி வீதியில் உள்ள காகீல்ஸ் அலுவலகத்தில் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலின் பின் கருத்து தெரிவித்த பிரிட்டிஸ் கவுன்சில் ஐ.ஈ.எல் ரிஎஸ் பரீட்சை பணிப்பாளர் ஸ்ரொமினி கட்சன், கடந்த 2019 ம் ஆண்டில் இருந்து கொரோனா நெருக்கடி மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையிலிருந்து பலர் புலம்பெயர்ந்த நாடுகளுக்கு செல்கின்ற நிலைமை காணப்படுகின்றது.
சிலருக்கு இந்த நாட்டில் இருந்து வெளியேறுவதற்கான தேவையுள்ளது. அவ்வாறு செல்வோர் கட்டாயமாக ஆங்கில மொழியில் தேர்ச்சி உள்ளவர்களாக இருக்க வேண்டும். ஆங்கில மொழியானது கட்டாயமானது.
அத்தோடு வேறு நாடுகளில் வேலை தேடுபவர்களும்உள்ளார்கள். அவ்வாறானவர்கள் ஐ.ஈ.எல்.ரி.எஸ் ஆங்கில கற்கையினை கற்று பரீட்சையில் சித்தியெய்தி வெளிநாடுகளுக்கு செல்கின்ற நிலைமை காணப்படுகின்றது.
குறிப்பாக இந்த பயிற்சி நெறியானது ஆங்கில மொழியினை விருத்தி செய்வதற்காகவும் ஆங்கில மொழி திறன் தொடர்பான தகைமையினை அறிய உருவாக்கப்பட்டது.
புலம்பெயர்கின்ற அனைவருக்கும் இந்த மொழிப்பரீட்சையானது முக்கியமானது. இலங்கையில் பிரிட்டிஷ் கவுன்சில் பல நிறுவனங்களுடன் இணைந்து இந்த சேவையினை செய்து வருகின்றது.
இந்த சேவையில் பலர் பயனடைந்து வருகின்றார்கள். அந்த நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்காகவே நான் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு ஐ.ஈ.எல்.ரீ.எஸ் கற்கை நெறியினை செயற்படுத்துவோர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக வருகை தந்து அவர்களுடன் கலந்துரையுள்ளேன் – என்றார்.