“சிறுபொறி” இதழ் வெளியீட்டு விழா

47 ஆண்டுகளுக்கு முன்னர் யாழ், சுழிபுரம்- சத்தியமனை நூலகத்தினால் கையெழுத்துப் பத்திரிகையாக வெளிவந்த மாணவர் இதழான “சிறுபொறி” மீண்டும்  அச்சிதழாக  நாளை (25) வெளிவரவுள்ளது.

அந்தவகையில் இந்நூல் வெளியீட்டு விழாவானது நாளை கே.ஏ.எஸ். சத்தியமனை நூலக அரங்கத்தில் காலை 9.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக வலிமேற்கு பிரதேச செயலாளர் பிரேமினி பொன்னம்பலம்  கலந்துகொள்ளவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்நூல் வெளியீட்டு விழாவில்  அனைவரும் கலந்துகொண்டு ஆதரவு அளிக்குமாறு  சத்தியமனை நூலக நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

Leave a Reply