நாளை நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரிப்பு! samugammedia

நாளை நாட்டில் அதிகளவு வெப்பநிலை நிலவும் என தெரிவிக்கப்படுகின்றது. 

மனித உடலால் உணரப்படும் வெப்பம் நாளை (25) காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் சில இடங்களில் இந்த கடும் வெப்ப நிலை நிலவுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால், மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Reply