திருகோணமலை- ஜமாலியா பகுதியில் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவர் பொலிஸ் தடுப்பு காவலில் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை ஜமாலியா பகுதியைச் சேர்ந்த 26வயது இளைஞன் எனவும் தெரிய வருகின்றது.
இதேவேளை திருகோணமலை பொலிஸில் தடுப்பில் இருந்த போது உயிரை மாய்த்துக்கொண்டதாக கூறப்படும் சம்பவத்துக்கு நீதிகோரி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.