பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

 

உலகக் கோப்பை செஸ் தொடரில் 2 ஆம் இடத்தைப்  பிடித்த தமிழக வீரர் பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை செஸ் தொடரின் இறுதிப் போட்டி அஜர்பைஜானின்  தலைநகரான  பாகுவில் நான்கு சுற்றுகளாக நடைபெற்றன.

நோர்வே வீரர் மேக்னஸ் கார்ல்சனுக்கும் தமிழக வீரரான பிரக்ஞானந்தாவுக்கு இடையே இடம்பெற்ற இப்போட்டியில் முதல் இரண்டு சுற்றுக்களும்  சமனிலையில்  முடிவடைந்தன.

இதனைத்  தொடர்ந்து நேற்றைய தினம் இடம்பெற்ற டை பிரேக்கர் சுற்றில் கார்ல்சன் வெற்றி பெற்று சம்பியன் பட்டத்தைச்  சுவீகரித்தார்.

இந்நிலையில் இப்போட்டியில் 2 ஆம் இடத்தைப் பிடித்த பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி உட்பட  பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply