வடகொரியாவிலிருந்து 30,000 ஆர்பிஜி ஆயுதங்களுடன் இலங்கை வந்த கப்பல் மாயமான இரகசியம்!

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பெரும் பொருளாதார நெருக்கடியின் பின்னணியிலேயே, வடகொரியாவிடம் கருப்பு பணத்தில் ஆயுதங்களை வாங்கிய தகவலை நிதி அமைச்சர் வெளியிட நேரிட்டதாக பிரித்தானியாவின் வேல்சில் இருக்கக்கூடிய கலாநிதி பிரபாகரன் (அரூஸ்) தெரிவித்துள்ளார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“அமெரிக்க புலனாய்வு அறிக்கையின் படி போர் இடம்பெற்ற காலத்தில் இலங்கை அரசாங்காம் வடகொரியாவிடம் இருந்து பெருமளவான ஆயுதங்களை பெற்றிருப்பது உறுதியாகியுள்ளது.இந்நிலையில், முதலாவது அணு குண்டு சோதனையின் பின்னர் வடகொரியாவிற்கு எதிராக அமெரிக்க பொருளாதார தடைகளை கொண்டுவந்திருந்தது. எனினும், அதனை இலங்கை அரசாங்கம் மீறியுள்ளது. எவ்வாறாயினும், இந்த விவகாரத்தில் அமெரிக்கா மௌனம் காத்து வருவதாக” அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *