வன்னி மண்ணின் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியன் முல்லைத்தீவு கோட்டையினை ஆங்கிலேயரிடம் வெற்றிகொண்டதன் 220 ஆவது ஆண்டுவிழா முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் கற்சிலைமடு கிராமத்தில் அமைந்துள்ள பண்டாரவன்னியன் சிலையடியில் இன்று நடைபெற்றது.
இதன்போது பண்டாரவன்னியன் சிலைக்கு மலர்மாலை அணிவித்து வணக்கம் செலுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து உருவப்படத்திற்கு மலர்தூவி வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், பண்டாரவன்னியனின் வரலாற்று கதையினை முல்லைமோடி கூத்தாக உருவாக்கம் செய்து மக்கள் மத்தியில் அறிமுகம் செய்த முதுபெரும் கலைஞர் காலாபூசணம் என்.எஸ்.மணியம் மாவட்ட அரச அதிபரால் கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.