பெற்றவளுக்காக பொலிஸ் கான்ஸ்டபிள் எடுத்த அதிரடி முடிவு! samugammedia

நோய்வாய்ப்பட்ட தனது தாயை பார்க்க விடுமுறை வழங்கப்படாத காரணத்தினால் ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் நிலையத்தின்  பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பதவியை  இராஜினாமா செய்துள்ளார்.

பொலன்னறுவை, புலஸ்திகம பிரதேசத்தில் வசிக்கும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு சேவையிலிருந்து விலகிச் சென்றுள்ளார்.

பணிக்கு வந்து 60 நாட்களாகியும் விடுப்பு எடுக்காமல் தனது கடமைகளை செய்ததாகவும் அதன் போது தாய்க்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை அறிந்து விடுமுறைக்கு விண்ணப்பித்தும் விடுமுறை வழங்கப்படவில்லை என  பொலிஸ் பதிவேட்டில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலைமையினால் அவர் தனது கடமைகளை செய்வதற்கு மனதளவில் தகுதியற்றவர் எனவும் அந்த குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கடந்த 25 ஆம் திகதி சேவையை விட்டு வெளியேறியதாக ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.​

Leave a Reply