பிரதான மார்க்க ரயில் சேவைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

கம்பஹா, தரலுவ ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் ஒன்று தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளாகியுள்ளது.

கண்டியில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணிக்கும் செங்கடகல மெனிகே ரயிலில் இவ்வாறு தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதோடு, இயந்திரத்தில் இருந்து அதிகளவு எண்ணெய் கசிவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக பிரதான மார்க்கத்தில் செல்லும் அனைத்து ரயில்களும் ஒரே தண்டவாளத்தில் பயணிப்பதாக கூறப்படுகிறது.

மேலும், ரயில் சீரமைக்கப்படும் வரை பிரதான மார்க்கத்தில் செல்லும் அனைத்து ரயில்களும் தாமதமாக செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply