
சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முகமாக 2022 ஆம் ஆண்டில் நாடளாவிய ரீதியில் 25 சுற்றுலா கிராமங்களை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறுகையில்,
ஒவ்வொரு திட்டத்திற்கும் 10 மில்லியன் ரூபாய் செலவிடப்படும் என தெரிவித்துள்ளதோடு அடுத்த ஆண்டில் குறைந்தது 1.2 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு ஈர்க்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், கட்டுநாயக்க விமான நிலையத்தை சுற்றுலாப் பயணிகளின் அதிகரிப்புக்காக கவர்ச்சிகரமான இடமாக மாற்றுவதற்கான திட்டத்தையும் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.