
திருகோணமலை – மொரவௌ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்து கைத்தொலைபேசியை திருடிய 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரொட்டவௌ கிராமத்தில் தனியாக வாழ்ந்து வந்த இளம் குடும்ப பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து குறித்த சிறுவன் பெறுமதியான கைத்தொலைபேசியை திருடியதாக மொரவௌ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கிண்ணியா பிரதேசத்தை சேர்ந்த 17 வயதுடைய றஹ்மத்துல்லா நஸ்ரின் என்னும் சிறுவனை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.