
ஈழத்து இசை நாடகத்துறையின் ஜாம்பவானாக திகழ்ந்த கலாநிதி நடிகமணி வீ.வீ.வைரமுத்துவின் உருவச்சிலை யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டது.
காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி அருகாமையில் காங்கேசன்துறை மக்கள் கலைஞர் அமைப்பினால் நிறுவப்பட்ட இச்சிலை திறந்து வைக்கப்பட்டு நினைவு கல் திரை நீக்கம் செய்யப்பட்டதோடு உருவச்சிலைக்கு மலர் மாலை அணியப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டது.
இந் நிகழ்வில் யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் சமூகவியல்துறைப் பேராசிரியருமான என்.சண்முகலிங்கன், தெல்லிப்பழை பிரதேச செயலாளர் எஸ்.சிவசிறி, வலி.வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் சோ.சுகிர்தன் மற்றும் கலைஞரின் உறவினர்கள் கிராம வாழ் மக்கள்,நலன் விரும்பிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.