இந்திய கடல் எல்லை பகுதியில் 80இற்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது!

<!–

இந்திய கடல் எல்லை பகுதியில் 80இற்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது! – Athavan News

எல்லை தாண்டி சட்டவிரோதமாக மீன்பிடித்த குற்றச்சாட்டில் 88 வங்கதேச மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடலோர காவல்படையினர் அறிவித்துள்ளனர்.

பங்கதுனி தீவில் இருந்து இந்திய கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்த 3 வங்கதேச படகுகளை ரோந்து பணியில் ஈடுபட்ட வீரர்கள் கைப்பற்றிய நிலையில், படகில் இருந்த சுமார் 360 கிலோகிராம் மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக  தெரிவித்துள்ளனர்.

அதேநேரம்   88 வங்கதேச மீனவர்களை கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *