வரலாற்றுச் சிறப்புமிக்க தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவத்தின் சப்பறத் திருவிழா இன்று(27) இடம்பெற்றது.
மாலை 4.00 மணியளவில் கொடித்தம்ப பூசை இடம்பெற்றதுடன் மாலை 5.00 மணியளவில் வசந்த மண்டப பூசையைத் தொடர்ந்து அம்பாள் , பிள்ளையார் , முருகன் மற்றும் சண்டேஸ்வரி சமேதராக சப்பறத்தில் எழுந்தருளி வெளிவீதி வலம் வந்து அடியார்களுக்கு அருள்பாலித்தார்.
ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரண்டு வந்து அம்பாளின் அருள் வேண்டி கற்பூரச் சட்டி எடுத்தும், காவடிகள் எடுத்தும்; அங்கப் பிரதிஷ்டை மேற்கொண்டும் தமது நேற்றிக்கடன்களை நிறைவேற்றினர்.
இதேவேளை வருடார்ந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா நாளைய தினம் இடம்பெறவுள்ளது. காலை 6.00 மணியளவில் கொடித்தம்ப பூசை இடம்பெற்று காலை 7.00 மணிக்கு வசந்த மண்டப பூசையைத் தொடர்ந்து அம்பாள் உள்வீதி திருநடனத்துடன் காலை 9.00 மணியளவில் தேரிலே ஆரோகணிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.