‘லிவா மிஸ் திவா யுனிவர்ஸ்‘ பட்டத்தை வென்றார்  ஸ்வேதா

மும்பையில் நேற்றைய தினம் நடைபெற்ற ‘லிவா மிஸ் திவா யுனிவர்ஸ் 2023‘  அழகிப் போட்டியில் ‘ஸ்வேதா சாரதா‘ என்ற இளம் யுவதி பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

11 ஆவது ஆண்டாக நடைபெறும் இப்போட்டியில் வெற்றிபெற்ற ஸ்வேதாவுக்கு முன்னாள் பிரபஞ்ச அழகியான சோனல் குக்ரஜா மகுடம் சூட்டினார்.

சுமார் 160 பெண்கள் பங்கேற்ற குறித்த போட்டியில் இறுதிச் சுற்றில் 16 பேர் தெரிவுசெய்யப்பட்டனர்.

2021ஆம் ஆண்டின் பிரபஞ்ச அழகிப் பட்டம் வென்ற ஹர்னாஸ் சந்து, நடிகைகள் ஸ்ரீநித ஷெட்டி, சங்கீதா பிஜ்லானி உள்ளிட்ட பலர் இப்போட்டியில் நடுவர்களாகப் பொறுப்பேற்றனர்.

திருமணமானவர்கள், விவாகரத்து பெற்றவர்கள், கர்ப்பிணிகள், மூன்றாம் பாலினத்தவர் உட்பட அனைவருக்கும் இப்போட்டியில் பங்கேற்க அனுமதியளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply